தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA). திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை திருப்பூரில் நடைபெற்றது.மாநில தலைவர் திரு.வீரமுத்து மாநில பொதுச் செயலாளர் திரு.வெள்ளைச்சாமி வாழ்த்துரை வழங்கினார்கள்.அனைத்து தாலுக்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை கருத்துகளை தெரிவித்தார்கள்.கூட்டத்தில் கேபிள் டிவி கட்டண உயர்வு குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த ஆண்டிற்க்கான உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தி 15ந் தேதிக்குள் நிறைவு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திரு.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திரு.குமார் நன்றியுரை வழங்கினார்.