TCOA திருவாரூர் மாவட்ட மாநாடு இன்று காலை பெரும் மழையிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ் செம்மல் புலவர் திரு.சண்முகவடிவேல் அவர்கள் கலந்து கொண்டு தனது நகைச்சுவை பேச்சால் ஆபரேட்டர்கள் மனங்களை கொள்ளை கொண்டார். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சபை தலைவர் திரு.பாலமுருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் வீரர் திரு.அபினேஷ் அவர்களை நிறுவனத்தலைவர் பாராட்டி கெளரவித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.