தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் வெள்ளி விழா ஆண்டு தர்மபுரி மாவட்ட மாநாடு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தலைவர் சிறப்பான எழுச்சியுரை ஆற்றினார். மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். ஆபரேட்டர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். குடும்பமாக கலந்து கொண்ட ஆபரேட்டர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.