TCOA விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த மாநாடு விழுப்புரத்தில் கோலகலமான திருவிழா போன்று நடைபெற்றது. ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் குடும்பமாக கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள்,வாணவேடிக்கைகள்,தெளிவான வேலை அறிக்கை, துல்லியமான வரவு செலவு அறிக்கை, ஏழை எளியோருக்கு நிறுவனர் கரங்களால் நலத்திட்ட உதவிகள்,ஜீடோ போட்டியில் தங்கம் வென்ற விழுப்புரம் மாணவிக்கு நிறுவனரின் சிறப்பு பரிசு,மாநில நிர்வாகிகளின் சிறப்பு உரைகள், புதிய நிர்வாகிகள் தேர்வு,நிறுவனத்தலைவருக்கு டாக்டர் பட்டம் என மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.