தோழர்களே வணக்கம்
???????
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின் மாநில தலைமையின் அறிக்கை
???????
மாநில நிர்வாக குழு கூட்டமும் மாநில செயற்குழு கூட்டம் 25-26 தேதிகளில் மாநில தலைவர் வீரமுத்து அவர்களின் தலைமையிலும் நிறுவனத் தலைவர் திரு. சகிலன் அவர்களுடைய வழிகாட்டுதல் அடிப்படையில் 600க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கெடுத்து 30.க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கெடுத்து கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது மேற்கண்ட கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன
???????
தீர்மானம்.1
2023 ஆம் ஆண்டு உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் சேர்ப்பு காலத்தை நீடிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தப்பட்டதால் மே மாதம் 15 ஆம் தேதிவரை நீடிப்பு செய்யப்பட்டது இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி தாலுகா மாவட்ட நிர்வாகிகள் கேபிள் டிவி தொழிலில் ஈடுபடக்கூடிய அனைவரையும் ஒளிபரப்பு வேறுபாடு இன்றி உறுப்பினர்ராக சேர்க்க வேண்டும் மேலும் தொழிலாளர்களையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பதை முடிவாக்கப்பட்டது
???????
தீர்மானம் 2
கேபிள் டிவி தொழில் பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியோடு மாறி வரக்கூடிய சூழலிலும் கார்ப்பரேட் நிறுவனங்களான ஜியோ ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கேபிள் டிவி தொழிலை தன் வசப்படுத்த முயற்சிக்கிறார்கள் அவர்களோடு நாம் போட்டி போட்டு தொழிலை பாதுகாக்க இன்டர்நெட் இல்லாமல் தொழிலை பாதுகாக்கவும் விரிவாக்கமும் செய்ய முடியாது என்பதை நமது மாநில தலைமை உணர்ந்து இன்டர்நெட்டை விரிவு படுத்தக்கூடிய வகையில் நமது மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தொழில் நுட்ப வல்லுநர்களை வைத்து வருகின்ற மே மாதம் 27ஆம் தேதி திருச்சியில் இன்டர்நெட் தொழில் கருத்தரங்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது
???????
தீர்மானம் 3
தாலுகா, மாவட்ட மாநாடுகளையும் மாநில பொதுக்குழுவையும் சிறப்பாக நடத்துவது என்றும் தாலுகா மாநாடுகளை ஜூன் 1 முதல் 7ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பது அனைத்து மாநாடுகளிலும் மாநில நிர்வாகிகள் பங்கேற்பது மாவட்ட மாநாடுகளை ஜூலை மாதத்திலும் மாநில பொதுக்குழுவை விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத முதல் வாரத்திலும் நடத்தி முடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது
???????
தீர்மானம் 4
அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மார்ச் 15ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் தமிழகம் முழுவதும் புதிய கேபிள் டிவி ஆபரேட்டர்களை உருவாக்க அரசு கேபிள் டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதை வன்மையாக மாநில செயற்குழு கண்டிப்பதோடு மேலும் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும்
நல்லதோர் மக்களாட்சிக்கு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் தவறான செயலால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை தவிர்க்க.
கோரியும் மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது நமது தொழிலை பாதுகாக்க நடைபெறுகின்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குடும்பத்தோடு 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று மாநில செயற்குழு தீர்மானித்தது
???????
தீர்மானம் 5
நடந்து முடிந்த NTO 3 அமலாக்கம் தொடர்பாக கால அவகாசம் இல்லாமல் விலையேற்றத்தை அறிவிப்பின் விளைவாக ஆபரேட்டர்கள் சொல்லான துயரத்தை அடைந்தோம் இதனால் எங்கள் கைகளில் இருந்து கூடுதலாக பணம் போட்டு மக்களுக்கு ஆக்டிவேட் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது இதை நிறுவனத் தலைவர் இந்த இழப்பீட்டை சரி செய்ய வேண்டும் என்று செயற்குழு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த இழப்பீட்டை மே மாதத்தில் பில் செய்யப்படும் பொழுது தங்கள் கணக்குகளில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று நிறுவனத் தலைவர் அவர்கள் அறிவித்ததை மாநில செயற்குழு மனமாரப் பாராட்டுகிறது
??????
தீர்மானம் 6
மாநில செயற்குழு TCCl என்பது தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் எனவே இந்த காலத்தில் ஏற்பட்டிருக்கும் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது ஆனால் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் நமது நிறுவனம் வழங்க வேண்டும் என்று மாநில செயற்குழு நிறுவனத் தலைவர் அவர்களை கேட்டுக் கொண்டது அதை ஏற்றுக் கொண்ட நிறுவனத் தலைவர் அவர்கள் எனக்கு இரண்டு ஒரு மாத கால அவகாசம் கொடுங்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் நிறுவனத்தையும் பாதுகாத்து உங்களின் எதிர்பார்ப்புகளையும் கண்டிப்பாக நிறைவேற்றித் தருகிறேன் என்று செயற்குழுவில் அறிவித்து மீண்டும் கடைக்கோடி ஆபரேட்டர்களின் பாதுகாவலன் என்பதை நிரூபித்த நிறுவன தலைவர் அவர்களை இந்த மாநில செயற்குழு மனமார பாராட்டுகிறது
???????
நண்பர்களே மாநில தலைமை உங்களை கேட்டுக் கொள்வதெல்லாம் அரசு எந்திரங்கள் மூலமாகவும் கார்ப்பரேட் கைக்கூலிகளும்நமது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நம்மளுடைய ஒற்றுமையை சீர்குலைக்க பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை செய்வதற்கு இறையாகாமல் என்றைக்கும் நமக்காக மாநில தலைமை இருக்கிறது நிறுவனர் இருக்கிறார் என்ற உறுதியோடு மேற்கண்ட முடிவுகளை நாம் இரும்பு கரம் கொண்டு செயல்படுத்துவோம் வெற்றி பெறுவோம் நன்றி வணக்கம்
???????
இப்படிக்கு P.சகிலன் அவர்கள்
நிறுவனத் தலைவர்
Mவீரமுத்து* மாநிலத் தலைவர்
S வெள்ளைச்சாமி மாநில பொதுச் செயலாளர்
R.கோவர்த்தனன் மாநில பொருளாளர்
???????