TCOA வெள்ளி விழா ஆண்டு மாநாடுகள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாநாடு இன்று காலை அரங்கம் நிறைந்து சிறப்பாக நடைபெற்றது. ஆபரேட்டர்கள் பெருந்திரளாக தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிறுவனத்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கி எழுச்சியுரை ஆற்றினார். TIC Fiber MD திரு.தணிகைவேல் மாநில தலைவர் திரு.வெள்ளைச்சாமி மாநில பொதுச்செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன், சிறப்புரை ஆற்றினார்கள். மாநில துணை தலைவர்கள் திரு.வீரமுத்து திரு.தாமோதரன், திரு.சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன் நலத்திட்ட உதவிகள் விவரங்களை விவரித்து வாழ்த்துரை வழங்கினர்.மாநில நிர்வாகிகள் திரு.சேகர், திரு.பாபு மற்றும் மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். அறுசுவை விருந்து பரிமாறப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.