TCOA கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் & புறநகர் தாலுக்கா மாநாடுகள் இன்று காலை நடைபெற்றது. மாநாட்டிற்கு திரு.லட்சுமணன், மெர்லின் தலைமை தாங்கினர். திரு.ராமகிருஷ்ணன், திரு.ரெஜிபால், திரு.உதயம் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொதுச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் TCCL,TIC பற்றிய விளக்கவுரை ஆற்றினார். மாநில துணை தலைவர்கள் திரு.வீரமுத்து, திரு.தாமோதரன், திரு.பிரபு, கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். திரு.வெங்கடேஷ் நன்றியுரை கூறினார். தமிழ்நாட்டில் அதிகமாக உறுப்பினர் சேர்க்கையை செய்த கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு மாநில தலைமையின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் TIC IPTV பரிசோதனை செயலாக்கத்தினை நிறுவனத்தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார். மீண்டும் மீண்டும் விலையேற்றம் செய்யும் கட்டணசேனல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தாலுக்கா வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.