TCOA ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் திரு.மணி, திரு . சீனுவாசன் தலைமை தாங்கினார்கள். மாநில தலைவர் திரு.வெள்ளைச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநில துணை தலைவர் திரு.வீரமுத்து, மாநில துணை செயலாளர் திரு.சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட செயலாளர் திரு.நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார் . மாவட்ட கெளரவ தலைவர் திரு.தாமோதரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தார்கள். கூட்டத்தில் தாலுக்கா மாநாடுகளை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.