உலகத் தமிழர்களின் மனசாட்சியாய் வலம் வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் மனதில் நீங்க இடம் பெற்று முதல் இடத்தை முந்தி பிடித்து அதனை தாங்கி தக்க வைத்துக் கொண்டிருக்கும் நியூஸ் தமிழ் 24x 7 நாளை உலக மலையாள மக்களின் எழுச்சியாய் எல்லைகள் கடந்து மக்களின் எண்ணங்களையும் எதிர்காலத்தையும் விளக்கிட விஸ்வரூபம் எடுக்கும் நியூஸ் மலையாளம் 24X7 சேனலானது நாளைய உலகை ஆள வான் வெளியில் உலக அரங்கில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. ஆபரேட்டர்களின் கூட்டு முயற்சியில் தமிழகம் தாண்டி இன்று அடுத்த மாநிலமான கேரளா மாநில கேபிள் ஆபரேட்டர்களையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையை இன்னும் பலப்படுத்தும் வகையில் வெளிவரும் இந்த புதிய சேனலுக்கு ஆப்பரேட்டர்கள் மட்டுமல்லாமல் அகில உலக மக்களும் குறிப்பாக தமிழினமும் மலையாள மக்களும் ஒருங்கிணைந்து இந்த சேனலின் வெற்றிக்கு உதவும் படியாக உங்களை தாழ்ந்து பணிந்து வேண்டிக் கொள்கின்றோம். வாழ்க! TCOA! வாழ்க! KCCL!
நன்றி! வணக்கம்!
இப்படிக்கு
சுபா. வெள்ளைச்சாமி மாநிலத் தலைவர்
எஸ். ராதாகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்
ஆர். கோவர்த்தனன் மாநில பொருளாளர்
மாநிலத் தலைமை, TCOA