தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுக்காவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று இளையான்குடியில் நடைபெற்றது.
முகாமில் மாநில தலைவர் திரு வீரமுத்து, மாநில துணை தலைவர் திரு.தாமோதரன், மாவட்ட தலைவர் திரு.சையது, மாவட்ட பொருளாளர் திரு.சிராஜீதீன் கலந்து கொண்டார்கள்.
மாநில தலைவர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்து உறுப்பினர் சேர்க்கை அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். மாநில துணை தலைவர் திரு.தாமோதரன் கேபிள் தொழிலாளர்களையும் உறுப்பினராக சேர்ப்பது குறித்தும், இன்சூரன்ஸ் தகவல் குறித்தும் NTO 3 விலையேற்றம் பற்றிய முழுமையான விளக்கம் அளித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஆபரேட்டர்களும் தங்களது உறுப்பினர் பதிவினை புதுப்பித்தார்கள்.