அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 18-Aug-2023

இரங்கல் செய்தி

நமது TCOA உறுப்பினரும் TCCL ஆபரேட்டர்மான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியைச் சார்ந்த (ஆர்.கே.எம் கேபிள்) திரு கிருஷ்ணமூர்த்தி நேற்றைய முன்தினம் கேபிள் டிவி வயர் பராமரிப்பு பணி செய்த பொழுது அதிவேக மின்சார வயர்களில் தனது கை பட்டு விபத்து ஏற்பட்டது உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது மிகவும் மன வேதனை அடைகின்றோம் கவனக்குறைவாக பணியாற்றும் ஆபரேட்டர் நண்பர்களுக்கு அதிவேக மின்சாரம் செல்லக்கூடிய பகுதியில் கவனமாக பணி புரியுங்கள் கவனக்குறைவால் நம்மை விட்டு இன்று ஒருவர் உயிர் பிரிந்தது