புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் கரம்பக்குடி தாலுகா மாநாடு வம்பன் நால் ரோட்டில் ஆலங்குடி மற்றும் கரம்பக்குடி தலைவர்கள் கணபதி மற்றும் கணேசன் அவர்கள் தலைமையில் ஆலங்குடி செயலாளr திரு. பாலசுப்பிரமணியம் வரவேற்புரையாற்ற, மாநில பொதுச் செயலாளர் திரு வெள்ளைச்சாமி அண்ணன் அவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர் அண்ணன் திரு தங்கையன் அவர்கள் சிறப்புரையாற்ற, மாவட்டச் தலைவர திரு. கண்ணன் அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு.சக்திவேல் அவர்கள் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் தாலுகா பொருளாளர் அவர்கள் ஆண்டு அறிக்கையும் மற்றும் இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் ஆலங்குடி மற்றும் கரம்பக்குடி தாலுகா பொறுப்பாளர்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் புதுக்கோட்டை தாலுகா பொருளாளர் திரு ராஜேஷ் அவர்களும், அறந்தாங்கி அறம் டிஜிட்டல் பங்குதாரர்கள் சுரேஷ் மற்றும் ரவிச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர். தாலுகாவில் உள்ள சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டிற்கான சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய அசைவிருந்தும் வழங்கப்பட்டது..