இராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன் கலந்து கொண்டு ஆபரேட்டர்கள் ஒற்றுமையின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாநில துணை தலைவர் திரு.அருணகிரி எதிர்கால தொழில் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தும் நுட்பங்கள் குறித்து விளக்கங்கள் அளித்தார். மாநில துணை செயலாளர் திரு.வெங்கடேசன் TIC தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் குறித்து விளக்கங்கள் அளித்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாலுக்கா சொந்தங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.