அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 03-Jul-2023

மாநில நிர்வாக குழு கூட்டம்

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம்

மாநில தலைமையின் சுற்றறிக்கை

உறவுகளே வணக்கம் 
நமது மாநில நிர்வாக குழு கூட்டம் 28/6/ 2023 புதன்கிழமை நடைபெற்றது கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஜி சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்
மாநில தலைவர் வீரமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்
??????
 நம்மை விட்டு பிரிந்த உறவுகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை மாநிலத் துணை செயலாளர் திரு சிவக்குமார் அவர்கள் முன்வைக்க மாநில நிர்வாக குழு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தியது

நடைபெற்ற வேலையை அறிக்கையையும் செயல்திட்டத்தை யும் மாநில பொதுச் செயலாளர் சுப.வெள்ளைச்சாமி அவர்கள் சமர்பிக்க

மாநிலத் துணைத் தலைவர் தணிகைவேல் அவர்களும் மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன் அவர்களும் செயல்திட்டத்தை முன் மொழிந்து பேசினார்கள்

 கீழ் வரும் தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் 1

உறுப்பினர் பதிவு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கப்பட்டு மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை துவங்கினோம் எதிரிகள் பல்வேறு இடர்பாடுகளை உருவாக்கினாலும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சரியான திட்டமிடலோடு நமது சங்க நிர்வாகிகள் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பயணித்து  10200 உறுப்பினர்களை மாநிலம் முழுவதும் சேர்த்துள்ளதற்கு மாநில  மாவட்ட  தாலுகா நிர்வாகிகளை மற்றும் மார்க்கெட்டிங் உறுப்பினர்களை மாநில நிர்வாக குழு மனமார பாராட்டியது

மேலும் TCCL நிறுவனத்தின் ஒளிபரப்பை எடுத்து நடத்தும் எந்த ஒரு ஆப்ரேட்டரும் சங்கத்தில் உறுப்பினராகாமல் இருக்கக் கூடாது என்றும்  அப்படி விடுபட்டிருக்கக் கூடிய உறுப்பினர்களை மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கண்டறிந்து ஜூலை 15க்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது சங்கம் என்பதே முதன்மையானது சங்க உறுப்பினர் என்பது தான் அடிப்படையானது உறுப்பினர் அட்டை உள்ளவருக்கு மட்டுமே சங்கத்தின்  உதவியும் TCCL நிறுவனத்தில் வழங்கப்படும் சலுகைகளும் கிடைக்கும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது
???????
தீர்மானம் 2

சங்கம் என்பது உயிரோட்டமாக இருக்க வேண்டுமேயானால் அதனுடைய அமைப்பு முறைகள் ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும் அதன் அடிப்படையில் தாலுகா மாநாடுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 30க்குள் நடத்தி ஜனநாயக பூர்வமாக நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட வேண்டும் கீழ்வரும் அட்டவணைப்படி மாநிலம் முழுவதும் அனைத்து தாலுகா மாநாடுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது தாலுகா மாநாடுகளில் வேலை பிரிவினை அடிப்படையில் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்
???????
தீர்மானம் 3
தாலுகா மாநாடுகளை நடத்தியதற்கு பிறகு 20 /9/ 2023 முதல் 28 /10 /2023 தேதிக்குள் மாவட்டம் மாநாடுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தாலுகா மாநாடுகளிலும் மாவட்ட மாநாடுகளிலும் சங்க உறுப்பினராக பதிவு செய்யாத எவரையும் அனுமதிக்க கூடாது பிரத்தியேகமாக புதிய உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமேயானால் அன்றைய தினமே சங்க உறுப்பினர் பதிவை செய்துவிட்டு மாநாட்டில் பங்கேற்கச் செய்ய வேண்டும் மாவட்ட மாநாடுகளை மிக எளிமையாக ஜனநாயக பூர்வமாக நடத்த வேண்டும் என்று வழிகாட்டப்பட்டது கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய மாநாட்டு தேதிகள் அடிப்படையில் மாநாடுகளை நடத்த வேண்டும் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டால் நிறுவனர் அவர்கள் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவே அனைத்து மாவட்ட மாநாடுகளிலும் நிறுவனத் தலைவர் அவர்கள் பங்கேற்பதும் மாநில நிர்வாகிகள் பங்கேற்பதையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது வெற்றிகரமாக ஜனநாயக கடமை நிறைவேற்றி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்தப்பட்டது
???????
தீர்மானம் 4
வளர்ந்து வரக்கூடியவிஞ்ஞான ரீதியான வளர்ச்சியை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் தமிழக முழுவதும் ஆபரேட்டர்களை பாதுகாக்க கூடிய வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்ளக்கூடிய முழு பலத்தோடு இன்டர்நெட் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக மாநில தலைமை திட்டமிட்டுள்ளது அதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளோம் மாவட்ட மாநாடு துவங்குவதற்கு முன்பு திருச்சி மாநகரில் ஐபி டிவி துவக்க விழா மற்றும் பிராட்பேண்ட் தொழில்நுட்ப வளர்ச்சி கருத்தரங்கம் நடத்தி அதில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது என்று தீர்மானம் வலியுறுத்தப்பட்டது

தீர்மானம் 5
NTO 3 அமலாக்கத்திற்கு வரும்பொழுது கட்டணம் உயர்வுகள் என்பது ஏற்பட்டது இதை நாம் எதிர்கொண்டு கடைக்கோடி ஆபரேட்டர்களை பாதுகாக்க கூடிய வகையில் பேக்கேஜ்களை உருவாக்கினோம் ஆனால் இன்று பேக்கேஜ் களை வாடிக்கையாளர்களின் பயன்பாடு என்பது நமது நிறுவனத்திற்கு நிதி நெருக்கடியை உருவாக்கி வருகிறது அதனால் பேக்கேஜ்களை மாற்றி அமைக்கக்கூடிய ஆலோசனையை நமது நிறுவனம் முன் வைத்தது மாநில நிர்வாக குழு கடைக்கோடி ஆப்பரேட்டர்களும் நமது TCCL நிறுவனமும் சங்கத்தின் இரண்டு கண்கள் என்பதை உணர்ந்து நிறுவனம் பாதிக்கப்படாமலும் கடைக்கோடி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும் இருக்க  டிசிஎல் நிறுவனத்திற்கு மாநில நிர்வாக குழு ஒரு ஆலோசனை வழங்கி இருக்கிறது அதன் அடிப்படையில் நிறுவனத் தலைவர் அவர்களும் மாநில தலைமை நிர்வாகிகளும் இணைந்து ஒரு கட்டண கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்திகிறது
???????
தீர்மானம் 6
உறுப்பினர்களுக்கு போடப்பட்டிருக்கக்கூடிய விபத்து காப்பீட்டு திட்டம் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சங்க உறுப்பினர்களை வாட்ஸ் அப் குழுக்களாக உருவாக்கி இன்சூரன்ஸ் தொடர்பான நலத்திட்டங்களை எப்படி பயன்படுத்துவது என்ற விளக்கத்தை நேரடியாக மாநில முழுவதும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழிகாட்டுவார்கள்

 TCOA பெயரில் தமிழக முழுவதும் செயல்படும் வாட்ஸ் அப் குழுக்கள் சங்க உறுப்பினர் மட்டுமே அதில் இடம்பெற வேண்டும் பிற whatsapp தளங்களில் நாம் பயணித்தாலும் நமது இயக்கத்தை ஒருவன் உதாசீனப்படுத்தும் பொழுது இழிவுபடுத்தும் பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது என்பதை உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டது மேலும் மாவட்டம் தோறும் சேர்த்த உறுப்பினர்களை மட்டும் இணைத்து whatsapp குழுக்களை உருவாக்க வேண்டும் சங்க முடிவுகள் எதிரிகளுக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் கூடவே இருந்து கருங்காலி வேலை செய்பவர்களை இனம் கண்டு வெளியேற்ற வேண்டும் என்று மாநில நிர்வாக குழு வலியுறுத்தியது

நிறைவுறையாக திரு நிறுவனத் தலைவர் அவர்கள் எதிர்கால கடமைகள் தொடர்பாகவும் நாம் சந்திக்க வேண்டிய தொழில் இடர்பாடுகளையும் விளக்க உரையாற்றி எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம் என்று வெற்றி உரையாற்றினார்
???????
மேற்கண்ட தீர்மானங்களை TCOA சங்கத்தின் போர்படை வீரர்களாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து இப்படை தோற்கினும் எப்படை வெல்லும் என்ற தாரக மந்திரத்தோடு மேலும் மேலும் வெற்றி படிக்கட்டுகளை உருவாக்க நிறுவனத் தலைவர் அவர்களுக்கு உறுதுணையோடு தமிழகத்தினுடைய 25 ஆயிரம் குடும்பங்களும் கைகோர்த்து நிற்போம் மேலும் பல சாதனைகளை படைப்போம் என்று கூறி மாநில தலைமை உங்களை வலியுறுத்துகின்றது
???????
இப்படிக்கு
P.சகிலன் நிறுவனத் தலைவர் அவர்கள்
M வீரமுத்து மாநிலத் தலைவர் சுப. வெள்ளைச்சாமி மாநில பொதுச் செயலாளர் ஆர் கோவர்தனன் மாநில பொருளாளர்