அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 03-Oct-2022

மறைந்த தெய்வத்திரு மாநிலத் துணைத் தலைவர் திரு.விஷ்ணுராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (27.09.2022)

அண்ணன் விஷ்ணு ராம்  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி  நிகழ்ச்சி (27/09/2022) செவ்வாய்கிழமை 

TCOA சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் மறைந்த அண்ணன் விஷ்ணு ராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருவாரூர்  மாவட்ட TCOA பொறுப்பாளர்கள் மற்றும் கூத்தாநல்லூர் தாலுகா பொறுப்பாளர்கள் இணைந்து பணங்காட்டாங்குடி மனோலயம் மன வளர்ச்சி குன்றிய ஆதரவற்ற குழந்தைகள் (கோவில்) இல்லத்திற்கு சிக்கன் பிரியாணி,  சிக்கன் கிரேவி, முட்டையுடன் கூடிய மதிய உணவை சிறப்பான முறையில் வழங்கி தெய்வதிரு விஷ்ணுராம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தோம்.

திருவாரூர் மாவட்டம் & கூத்தாநல்லூர் தாலுகா TCOA.