அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 11-Oct-2023

மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் 2

மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் 2 ?       ♦️தூத்துக்குடி மாநகரில் வருகிற 04.12.2023  அன்று * *நடைபெற உள்ள நமது TCOA  சங்கத்தின்         22 வது மாநில மாநாட்டினை சிறப்பாக நடத்துவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் 06.19.23 அன்று தூத்துக்குடியில் நடைபெற்றது

? கூட்டத்திற்கு உயர்மட்ட குழு உறுப்பினர் எம். ஆர் பிரபு தலைமை தாங்கினார்  மாநில பொது செயலாளர் திரு. வெள்ளைசாமி அவர்கள்  சிறப்புரையுடன் மாநிலத் துணைச் செயலாளர்கள்  திரு. இராதா கிருஷ்ணன் மதுரை திரு.குமரேசன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு .கண்ணன் பொருளாளர் திரு.இராஜூ  திருநெல்வேலி மாவட்ட செயலாளர்
திரு.சரவணன்  மற்றும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் திரு.ராம கிருஷ்ணன் * *தூத்துக்குடி மாவட்ட அனைத்து தாலுக்கா பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் 

?இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தாலுக்கா பொறுப்பாளர்களிடையே பேசிய மாநில பொதுச் செயலாளர்  மாநில மாநாட்டில் சுமார் 7000  ஆபரேட்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும்  அவர்களுக்கு சிறந்த முறையில் அசைவ /சைவ உணவு வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்றும்   நமது மாவட்டத்திற்கு வரும் நமது ஆபரேட்டர்களை நல்ல முறையில் உபசரித்து அனுப்புவது நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆபரேட்டர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் பிற மாவட்டங்களில் நடைபெற்றதை விட தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது என்று எல்லோரும் எப்போதும் பேசும் விதமாக சிறப்பாக நடைபெற ஒவ்வொரு  ஆபரேட்டர்களும்தனது பங்களிப்பை செலுத்தி மாநாடு வெற்றியடைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்  .

?மேலும் நமது நிறுவனர் அவர்கள்  எண்ணத்தை நிறைவேற்று விதமாக மிக சிறப்பாக மாநாடு நடைபெற வேண்டும்  என்று கன்னியாகுமரி மாவட்ட தலைவர் அவர்கள் கூறினார்கள்
?கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஓட்டபிடாரம் தாலுகா பொறுப்பாளர்கள்  உட்பட 18 நபர்கள் தாமாக முன் வந்து சுமார் ரூ. 1,52,000 (ஒரு லட்சத்து ஐம்பத்தி இரண்டு ஆயிரம்) நன்கொடை கொடுக்க முன் வந்தார்கள்.

  ?நமது மாவட்டத்தில் 375 ஆபரேட்டர்கள் உள்ளனர். அனைவரும் நன்கொடை கொடுக்க முன் வர வேண்டும்  மாநில நிர்வாகிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆபரேட்டர்களின்    இல்லத்திற்கு நேரடியாக வருவோம் என்றும் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்து நன்கொடை வழங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.தூத்துக்குடி தாலுக்கா திரு.வைகுந்தம் அவர்கள் நன்றியுரை கூறினார்